கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் முன்பு ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர் அதில் முக்கிய அம்சங்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அருந்ததியர் சமூக மக்களின் உள் இட ஒதுக்கீட்டை 3% இருந்து 6%உயர்த்தி வழங்க கோரியும் எஸ்சி/எஸ்டி/வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரப்படுத்த கோரியும் உயர்ந்த வகுப்பு சாதியினருக்கு வழங்கப்பட்ட 10%இட ஒதுக்கீ ரத்து செய்ய கோரியும் தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறைக்கு வழங்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்த கோரியும் தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் பள்ளி மாணவன் சீனுவின் மர்ம மரணத்திற்கு நீதி கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் முன்னிலையில் தென்மண்டல செயலாளர் நம்பி ராஜ்பாண்டியன், பொதுச் செயலாளர் விஸ்வைகுமார் மாநில அமைப்பு செயலாளர் தீலிபன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
மாநில ஊடகப் பிரிவு இனைசெயலாளர் அகரம்சத்யா, மாநில இளைஞரணி துணை செயலாளர் செந்தூர்பழனி,தென்மண்டல அமைப்பு செயலாளர் சுரேஷ்வேலன் தெற்கு மாவட்ட செயலாளர்
ஊர்காவலன் மாவட்ட நிதிச் செயலாளர் பிரபாகரன் இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.