கோவையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு எட்டாவது முறையாக கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2022!!
கோவையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு எட்டாவது முறையாக கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2022 எனும் நுகர்வோர் திருவிழா வரும் டிசம்பர் 23ஆம் தேதி துவங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கொடிசியா சார்பாக கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா நடைபெறும்.. நுகர்வோர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக மெகா ஷாப்பிங் விழாவாக நடக்கும் இந்த கண்காட்சி கொரோனா கால கடந்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2022 கண்காட்சி வரும் டிசம்பர் 23ஆம் தேதி துவங்கி ஜனவரி ஒன்றாம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் ராஜேந்திரன் கொடிசியா தலைவர் திருஞானம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசினர் அப்போது இந்த கண்காட்சியில் சுமார் 270 க்கும் மேல் நிறுவனங்கள் கலந்து கொள்வதாகவும் இந்த கண்காட்சியில் குழந்தைகள்,பெரியவர்கற் என அனைவருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ,உணவு அரங்கங்கள் மற்றும் விளையாட்டுடன் அமைந்த மாபெரும் நுகர்வோர் கண்காட்சியாக நடைபெற உள்ளது இந்த கண்காட்சியில் வீட்டு உபயோக சாதனங்கள் சூரிய ஒளி சாதனங்கள் தங்கம் மற்றும் வைர நகைகள், பரிசு பொருட்கள் பர்னிச்சர்ஸ் ஜவுளி வகைகள் கைவினைப் பொருட்கள் உடற்பயிற்சி சாதனங்கள் ஆட்டோமொபைல் உதிர் பாகங்கள் சமையலறை பொருட்கள் என நுகர்வோர்களின் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த கண்காட்சி அமைய உள்ளதாக தெரிவித்தனர்… கோவையின் வர்த்தக மேம்பாடு மற்றும் சுற்றுலாத் தொழில் வளரும் வகையில் இந்த கண்காட்சி செயல்படுவதோடு கொங்கு நாட்டின் நிகரற்ற சிறப்புகளை வெளிக்காட்டும் வகையிலும் இந்த கண்காட்சி அமையும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.
also read ↓
https://nalaiyavaralaru.com/2022/12/காங்கிரஸ்-சிறுபான்மை-துற