சிங்கம்புணரி அருகே இளம் பெண்ணை கற்பழிக்க முயற்சி!
வாலிபருக்கு காவல்துறை வலைவீச்சு!
சிங்கம்புணரி அருகே உள்ள எம்.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 35). தந்தையை இழந்த இவர், தனது தாயுடன் வசித்து வருகிறார். சரக்கு வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த 21 வயதுள்ள இளம்பெண் ஒருவர், அங்குள்ள வடதரன்கண்மாயில் நேற்று மாலை 3 மணிளவில் குளிக்கச் சென்றிருக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து அங்கு வந்த மதியழகன், அந்தப் பெண்ணை கண்மாய்க்குள் தள்ளி கற்பழிக்க செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிடவே மதியழகன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதன்பின் அந்தப் பெண் அங்கிருந்து வீட்டுக்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்த நிகழ்வை கூறியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ்.வி.மங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மதியழகனை வலை வீசித்தேடி வருகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறிய கிராமத்தில் நடந்துள்ள இந்த கற்பழிப்பு முயற்சி, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.