டாடா குழுமத்தின் அங்கமான தனது புதிய புதுப்பிக்கப்பட்ட பிரத்யேக விற்பனை மையத்தை கோவை காந்திபுரம் பகுதியில் துவங்கியது…!!
இந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனை பிராண்டான டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜுவல்லரி கோவை காந்திபுரம் பகுதியில் தனது புதுப்பிக்கப்பட்ட கிளையை துவக்கியது. ஆறாயிரம் சதுர அடி பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ள இதற்கான துவக்க விழாவில்,டைட்டன் நிறுவனத்தின் மெர்ச்சண்டைசிங் பிரிவு தலைமை நிர்வாகி சுனில்ராஜ் புதுப்பிக்கப்பட்ட விற்பனை மையத்தை திறந்து வைத்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புதிய விற்பனை மையத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்துவமிக்க வடிவமைப்புகளில் நகைகள் இடம்பெற்றுள்ளன குறிப்பாக இந்த விற்பனை நிலையத்தில் வயிறு நகைகளுக்கு என ஒரு பிரத்தியேக பகுதியில் மேலும் மதிப்பு கொண்ட ஒற்றை வைரத்திலான சாலிடர் வகை வகைகள் அதிக மதிப்புள்ள வைர நகைகளுக்கான இடமும் பிரத்தியேகமாக செயல்படுகின்றது மேலும் திருமண நகைகளைக்கான ரிவா எனும் தனிப்பிரிவு ஆண்களுக்கான பிரேஸ்லேட் உள்ளிட்ட நகைகளுக்கான அவீர் எனும் பிராண்ட் விற்பனை பிரிவு என தனித்தனி பிரிவுகளாக மூன்று மாடிகளில் இந்த விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது….குறிப்பாக,பெண்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தனிஷ்க் பிராண்ட் வகையில் அண்மையில் அறிமுகமாகி உள்ள சோழா கலெக்சன்ஸ் ஆபரண நகைகளான, சோழர் கால கட்டிடக்கலை,சிற்பம்,ஓவியம் ஆகியவற்றை கண் முன் நிறுத்தும் விதமாக கண்கவர் டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவை முன்னிட்டு,23 ந்தேதி முதல் 25 ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தங்க நகைகள் வாங்கும் போதும் இலவச தங்க நாணயம் வழங்கப்படுவதாக தலைமை பிரிவு நிர்வாகி சுனில் ராஜ்,மற்றும் வர்த்தக அசோசியேட் செல்வகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.
also read : ↓
https://nalaiyavaralaru.com/2022/12/பிராணவாயு/