கோட்டூரை சேர்ந்த மணிமுத்து வயது 27 இவர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் தென்னை மரங்களில் இருந்து தேங்காய் பறிக்க பயன்படுத்தக்கூடிய மூங்கில் மரங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனைமலை உடுமலை சாலை தென்செங்கம்பாளையம் தண்ணீர் மடம் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது வேகத்தடை இருந்ததால் திடீரென பிரேக் அடித்ததில் பின்னால் வந்த ஆனைமலை உடுமலை செல்லும் அரசு பேருந்து டிராக்டரில் கட்டி இருந்த மூங்கில் மீது பேருந்து மோதியதில் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த நபர்களுக்கு யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தை பாதிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.