பள்ளியில் புத்தக கண்காட்சி ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு!!
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், ஹிந்து அமைப்பினர் திரண்டு மனு அளித்தனர்.
பின்னல் புக் டிரஸ்ட்டுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வளாகத்தில், வரும் ஜன., 27ல் துவங்கி பிப்., 5ம் தேதி வரை, புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்னல் பதிப்பகம் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தது.
பள்ளி வளாகத்தில் வர்த்தகம் சார்ந்த புத்தக கண்காட்சியை நடத்த கூடாது. அரசு இயந்திரம் கட்சி சார்பின்றி செயல்படவேண்டியது அவசியம், கண்காட்சிக்கு தடை விதிக்கவேண்டும். புத்தக கண்காட்சி, மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படாது. வியாபார நோக்கம் கொண்ட புத்தக கண்காட்சியை, பள்ளி வளாகத்தில் நடத்த அனுமதிப்பது சட்டத்துக்கு எதிரானது. பள்ளி வளாகத்தில் நடத்தினால், மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.” இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி,ஹிந்து மக்கள் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.
மேலும் படிக்கவும்:
ஹிஜாப் “ஓவர்”.. அடுத்து ஹலால் தடை! நெருங்கும் கர்நாடக தேர்தல் – புதிய ஆயுதத்தை கையில் எடுத்த பாஜக 👇
https://www.nalaiyavaralaru.page/2022/12/blog-post_71.html