பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100வது வயதில் காலமானார்!!

பிரதமர் மோடியின் தாயார்

பிரதமர் மோடியின் தாயார்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100வது வயதில் காலமானார்!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100வது வயதில் இன்று அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா இருதய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ” ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது” என்று பிரதமர் மோடி அவரது மறைவு குறித்து தெரிவிக்கும் போது கூறினார். ஐநா மேத்தா இருதய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹீராபென் மோடி 30/12/2022 அன்று அதிகாலை 3.30 மணியளவில் காலமானார்” என்று மருத்துவ அறிக்கை அளித்தது. அவரது மறைவு செய்தி வெளியானதும், இரங்கல்களும் அஞ்சலிகளும் குவியத் தொடங்கி உள்ளன.

தன் தாயின் மறைவு குறித்து ” ஒரு துறவியின் பயணம், ஒரு தன்னலமற்ற கர்மயோகியின் சின்னம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை என் தாயிடம் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.” இதயப்பூர்வமான குறிப்புகளை, பிரதமர் எழுதினார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மற்றொரு ட்வீட்டில், “ அவரது 100 வது பிறந்தநாளில் தன் தாயாரை சநசந்தித்தபோது, ‘புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், வாழ்க்கையைத் தூய்மையுடன் வாழுங்கள்’ அவர் ஒரு விஷயத்தைச் கூறீ இருந்தார். அது இப்போதும் நினைவில் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஹீராபா என்றும் அழைக்கப்படும் ஹீராபென் அவர்கள், பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடியுடன் காந்திநகர் அருகே உள்ள ரேசன் கிராமத்தில் வசித்து வந்தார். பிரதமர் தனது பெரும்பாலான குஜராத் பயணங்களின் போது தன் தாயிடம் தவறாமல் கண்டு வருவார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

சில உடல்நலக் குறைபாடுகள் காரணமாக அவர் புதன்கிழமை காலை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ‘UN மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்’ அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்தது. ஹீராபென் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று குஜராத் முதல்வர் அலுவலகம் (சிஎம்ஓ) அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்க மேற்கு வங்காளத்திற்குச் செல்லவிருந்த பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நிகழ்வுகளில் சேரலாம் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படியே, பிரதமர் மோடி அகமதாபாத் புறப்பட்டார். ஹவுரா, கொல்கத்தாவில் வந்தே பாரத் ரயிலை வீடியோ கான்பரன்சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ” மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரபாய் மோடியின் தாயார் பூஜ்யா ஹீராபாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. பூஜ்ய ஹீராபா பெருந்தன்மை, எளிமை, கடின உழைப்பு மற்றும் உயர்ந்த வாழ்க்கை மதிப்புகளின் உருவகமாக இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடை கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்தார், ” பிரதமர் திரு நரேந்திரமோடியின் தாயார் ஹிரா பா அவர்களின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு தாயின் மரணம் ஒருவரது வாழ்வில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. இந்த துயர நேரத்தில் பிரதமர் மற்றும் அவரது முழு குடும்பத்திற்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!”

ஹீராபென் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” தாயை இழந்த வேதனை உலகின் மிகப்பெரிய வலி என்பதில் சந்தேகமில்லை. பிரதமர் ஜியின் மதிப்பிற்குரிய மாதாஜி ஹிரா பாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. ஒருவரின் வாழ்க்கையின் முதல் தோழி மற்றும் ஆசிரியை அம்மா தான், யாரை இழந்தால் ஏற்படும் வலி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகப்பெரிய வலி” என்று உள்துறை அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

இது தவிர முன்னணி சினிமா நட்சத்திரங்களும் முக்கிய பிரமுகர்களும் பிரதமர் மோடி அவர்களுக்கு இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-மு. ஹரி சங்கர், கோவை வடக்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp