பூதபாண்டி:
கன்னியாகுமாரி மாவட்டம், தோவாளை தாலுகா, பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பூதப்பாண்டியில் ப.ஜீவானந்தம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பள்ளியின் அருகே குப்பைகள் குவியலாக குவிந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் முதல் பாடம் பயிற்று விக்கும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள்
என அனைவரும் நோய் தொற்று பரவி விடும் என்று பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் நோற்தொற்று வேகமாக உருவாகும் சூழல் அமைந்ததால் சம்பந்தப்பட்ட நிர்வாகம காலதாமதம் செய்யாமல் அப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி, சாக்கடை ஓடைகளை தூர்வாரி, பிளிச்சிங் பவுடர் தூவி,
கொசு மருந்து அடித்து நோய் தொற்றில்லா சூழலை உருவாக்கி மாணவ-மாணவிகளின் நலனை காத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கன்னியாகுமாரி மாவட்ட துணைச் செயலாளர் எஸ். நாராயணசாமி சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை வைக்கிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தமிழக துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.
One Response
மக்கள் வசிக்காத பகுதியாகிய அப்பகுதியில் குப்பைகளை அதிகமாக கொட்டியது யார்? பொதுமக்களுக்கும் சிறிதளவு பொறுப்புணர்வு இருக்கு வேண்டும்.