பல்லடம், கணதிபாளையம் ஊராட்சி நல்லுார்பாளையத்தை சேர்ந்தவர் குமார், வயது 40. கட்டிடத் தொழிலாளியான இவருக்கு சதீஷ்குமார், 21 வெற்றி, 18 என இரு மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்குமார் சூலுார் ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கிறார்.
சதீஷ்குமார் தனது தந்தையிடம் சில மாதங்களாகவே பைக் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு குமார் புதிதாக வீடு கட்டி உள்ளதால் தன்னிடம் தற்போது பணம் இல்லை பிறகு வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் மனம் வருத்தம் அடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.