கோவை பொள்ளாச்சி:
சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் நடிக்க ஆர்வமுடைய கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களுக்காக பொள்ளாச்சியில் பிளாக் மெரினா சினிமா பயிற்சி பட்டறை துவக்கம்.
சென்னையில் பிளாக் மெரினா சினிமா பயிற்சி பட்டறை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதகளில் வசிக்கும் திரையில் நடிக்க ஆர்வமுடையவர்களுக்காக கோவையை அடுத்த பொள்ளாச்சியில் பயிற்சி பட்டறை வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நடிகர், இயக்குனர், நடிப்பு பயிற்சியாளர் மாஸ்டர் பொன்முடி மற்றும் துணை இயக்குனர் வெண்ணிலா கே.ரவிக்குமார் ஆகியோர் இணைந்து துவங்கியுள்ள இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில், பிளாக் மெரினா சினிமா ஒருங்கிணைப்பாளர் வெண்னிலா கே.ரவிக்குமார், V3 திரைப்பட இயக்குனர் அமுதவாணன், நடிப்பு பயிற்சியாளர் மாஸ்டர் பொன்முடி, இயக்குனர் உயிர் சுரேஷ், டான்ஸ் மாஸ்டர் புவனேஷ், நடிகர் வேல், உதவி இயக்குநர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
சினிமா தொடர்பான அனைத்து வசதிகளும் கோவையில் உள்ள நிலையில் நல்ல நடிக்க திறமையானவர்களை உருவாக்கும் வகையில் இந்த சினிமா பயிற்சி பட்டறையை துவக்குவதாகவும்,பெரிய மற்றும் சின்னத்திரைகளில் நடிக்க ஆர்வமுள்ளவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் நடனம்,கலை உள்ளிட்ட நடிப்பதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் இங்கு வழங்க உள்ளதாக தெரிவித்தனர். இதனால் கோவையை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களில் கோவையை சேர்ந்த நடிகர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என தெரிவித்தனர்.
– சீனி, போத்தனூர்.
இந்த செய்தியையும் பாருங்கள் : https://nalaiyavaralaru.com/2022/12/ரோட்டரி-கிளப்-ஆப்-கோயம்ப/