
விளையாட்டு:
கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட ஆழியாறு பகுதியை சுற்றியுள்ள அன்பு நகர், சின்னார் பதி, பந்தக் காலம்மன் பதி, பகுதிகளில் வாழுகிற மாணவர்கள், இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தி பயன் பெறுகிற விதத்தில் ஆழியாறு அன்பு நகரில் உள்ள
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரிசர்வ் சைடில் கபடி மைதானம், கைப்பந்து, மைதானம் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர்,A. அம்மாசை, அவர்களின் தலைமையில்,

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஆனைமலை தாலுகா செயலாளர், தோழர்,R. தங்கவேல் முன்னிலையில் தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் சார்பில், தோழர் சூர்யா பெயரில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.












