வாகன ஓட்டிகளை தடுமாற வைக்கும் குதிரைகள்! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!
சிறுவாணி மெயின் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றி திரியும் குதிரைகள் கடிவாளம் இடுவது யார்?
சிறுவாணி மெயின் ரோட்டில், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், சுற்றித்திரியும் குதிரைகளை பிடிக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையின் முக்கிய சாலைகளில் ஒன்றாக சிறுவாணி சாலை உள்ளது.
இந்த சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, பேரூர் முதல் ஆலாந்துறை வரையிலான, சிறுவாணி மெயின் ரோட்டில், குதிரைகள் சுற்றித்திரிந்து வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த குதிரைகள், போக்குவரத்து நிறைந்த சாலையின் குறுக்கு, நெடுக்குமாக சுற்றி வருவதால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆனால், சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளின் உரிமையாளர் யார் என்றும் தெரியாத நிலை உள்ளது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும், கால்நடைகளை,
மாநகராட்சி நிர்வாகம் பிடித்து, உரிமையாளருக்கு அபராதம் விதித்து வருகிறது. அதேபோல, சிறுவாணி சாலையில், சுற்றித்திரியும் குதிரைகளை அந்தந்த பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர்பிடித்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது குதிரைகளை ஏலம் விட வேண்டும். அப்போதுதான், சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக
சுற்றும் குதிரைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.












