வெல்டிங் மிஷன் வைத்து அடகு கடையில் கொள்ளை முயற்சி – போலீஸ் விசாரணை!!
விளாத்திகுளத்தில் அடகு கடையில் வெல்டிங் மிஷன் வைத்து கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மதுரை சாலையில் அமைந்துள்ள சேர்மதுரை என்பவருக்கு சொந்தமான வசந்தா ஜூவல்லரி செயல்பட்டு வருகிறது, மேலும் அதன் அருகிலே மீனாட்சி பைனான்ஸ் மற்றும் அடகு கடையும் இயங்கி வருகிறது. இக்கடையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வெல்டிங் மெஷினை வைத்து ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் அங்கு இருந்த சிசிடிவி கேமராக்கள் இணைப்புகளை துண்டித்தும் மிளகாய் பொடியை தூவியும் விட்டு சென்றுள்ளனர். காலையில் கடையை திறக்க சென்ற உரிமையாளர் வெல்டிங் வைத்து ஷட்டரின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இது குறித்து குறித்து விளாத்திகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன் தூத்துக்குடி.