அருந்ததியர் இன மக்களை இழிவுபடுத்தி பேசிய சீமான் அவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி புகார் மனு!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் டி.என்.ஏ சோதனை செய்யாமலேயே யார் தமிழர்? யார் வந்தேறிகள்? என்கின்ற மாபெரும் ஆராய்ச்சியை செய்து வருகிறார் சீமான். அருந்ததிய மக்களுக்கு சான்றிதழ் தர சீமான் யார்? ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் முதலியார் சாதியை சேர்ந்த மக்கள் அதிகமாக இருப்பதால் தன்னுடைய கட்சியும் முதலியார் சாதியை சேர்ந்தவரை நிறுத்தியுள்ளது என்று பெருமையாக கூறியுள்ளார் சீமான்.இப்படி சாதிப்பெருமையை பேசிக் கொண்டிருக்கும் சீமான் நாம் தமிழர் என்ற பேசுவதே கேலிக்கூத்தானது. அவரே அருந்ததியர்கள் வந்தேறிகள் என்ற கருத்தையும் உதிர்த்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழரைப் பிளவு படுத்தி தமிழினத்தை உடைத்து தமிழ்நாட்டை கூறுபோடும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க பாசிச கும்பலின் நிகிழ்ச்சி நிரலையே சீமான் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று கூறி தமிழின ஒற்றுமையை உடைக்கும் சீமானின் பேச்சினை ஆதித்தமிழர் காட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சீமான் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் ஊர்காவலன் வடக்கு மாவட்ட செயலாளர்
தோழர் சேகர் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தோழர் ஆற்றலரசு தெற்கு மாவட்ட துணை செயலாளர் தோழர் சித்திரவேல் தெற்கு மாவட்ட துணை செயலாளர் தோழர் அன்பரசு கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் —- -முனியசாமி.