தென்னிந்தியாவின் நாஸ்டர்டாம், ஜோதிட சாம்ராட் கோவை மூகாம்பிகை தாசன்.
பாஜக மூத்த தலைவரும், தேசிய முன்னாள் செயலாளரும் “தமிழ்” நாடறிந்த அரசியல்வாதியும் ஆக திகழ்பவர் எச்.ராஜா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை அதிரடி பேட்டிகளுக்கு புகழ் பெற்றவர். இவர்கள் இருவருமே மத்திய அரசிலும் மாநில அந்தஸ்திலும் மத்திய அமைச்சர், ஆளுநர் ஆகிய உச்ச பதவியை விரைவில் பெறுவர் என்கிறார், கோவை ஜோதிட சாம்ராட்…!! மாஜி முதல்வர் ஜெயலலிதா சிறை செல்வார், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் நடக்கும், ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என முன்கூட்டியே நக்கீரன், நெற்றிக்கண் பத்திரிக்கைகளில் கணித்து சொன்னவர் “தென்னிந்தியாவின் நாஸ்டர்டாம்” – “ஜோதிட சாம்ராட்” கோவை மூகாம்பிகை தாசன்.
அதுமட்டுமல்ல, ஆளுநர் சென்னாரெட்டி அரசியல் ஆலோசகராக இருந்து ஆளுனர் மாளிகையில் யாகம் நடத்தியவர். இதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோபத்திற்கு ஆளானவர் மூகாம்பிகை தாசன்! பா.ஜ கட்சி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மிகப்பெரிய பொறுப்பு பதவி வகிப்பார்; தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை 2023 ல் மத்திய மந்திரி அல்லது ஆளுநர் ஆவார் என கோவை ஜோதிட சாம்ராட் மூகாம்பிகை தாசன் கணித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர். பா.ஜ கட்சியில் அதீத துணிச்சலுக்கு சொந்தக்காரர் எச்.ராஜா அவர்கள்!
பாஜக முன்னாள் தேசிய செயலாளர், மூத்த தலைவர் எச்.ராஜா.
இவரது ஆத்மார்த்தமான நண்பர் காரைக்குடி பாபா காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ஜோதிட சாம்ராட் கோவை மூகாம்பிகை தாசன். காரைக்குடி சட்டசபை தேர்தலுக்கு முன்பே எச்.ராஜா அந்த தொகுதியில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆவார் என முன்கூட்டியே கணித்தவர் ஜோதிடர் மூகாம்பிகை தாசன். தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் எச்.ராஜா. இவரை கேரள மாநில ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்
பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தை சேர்ந்த எல். முருகன் மத்திய இணையமைச்சர் ஆக்கப்பட்டார். தமிழிசை சவுந்தர ராஜன், இல.கணேசன், சி.பி ராதாகிருஷ்ணன் ஆளுனர்கள் ஆகினர். கடந்த கால பின்னணியில், எச்.ராஜா பாரதிய ஜனதா கட்சியில் 1989 ஆம் ஆண்டு இணைந்தது முதல் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2001 ம் ஆண்டு காரைக்குடி தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் உதயப்பாவை தோற்கடித்து முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.
தமிழக பாஜக தலைவர், முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை.
இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் என 6 முறை தேர்தலில் போட்டியிட்டவர் ஒரே ஒரு முறை மட்டுமே தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணியாற்றிய ராஜா தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
திராவிட கட்சிகளுக்கு எதிரான தனது துணிச்சல் மிக்க சர்ச்சை பேச்சால் அனைவராலும் அறியப்பட்டவர்.
இந்நிலையில் எச்.ராஜாவிற்கு ஆளுநர் பதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் கவர்னராக உள்ளார். மற்றொரு மூத்த தலைவர் இல. கணேசனும் கவர்னராக வலம் வருகிறார். இந்த பின்னணியில், எச்.ராஜா இந்திய அரசியலில் மாநிலத்தில் மிகப்பெரிய பதவியை பெறுவது உறுதி என்கிறார், கோவை மூகாம்பிகை தாசன்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அரசியலிலும் தேசிய கட்சியான பா.ஜ.,விலும் எச்.ராஜா, தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் எதிர்காலம், பங்களிப்பு எப்படி இருக்கும்? என ஜோதிட ரீதியான பலன்களை குறித்து அவர் அளித்த சிறப்பு பேட்டி:
காரைக்குடியை சேர்ந்த பா.ஜ தலைவர் எச்.ராஜா அவர்கள் எனது நீண்ட கால நண்பர். காரைக்குடியில் எம்.எல்.ஏ வாக வெற்றி பெறுவார் என கணித்து சொன்னது நடந்தது. H.Raja பெயர் எண், விதி எண் கூட்டுத்தொகை 1 ல் வருவதாலும் அந்த நேரத்தில் உள்ள கிரக நிலையாலும் எம்.எல்.வாக வெற்றி பெற்றார். திரு.எச்.ராஜா விதி எண்ணை ஆராயும்போது நிச்சயமாக இந்தியா அரசியலில் மிகப்பெரிய பதவியை இந்த 2022 ம் ஆண்டில் பெறுவது உறுதி. இது தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமையும். எச்.ராஜா அவர்கள் ஜாதகம் இந்த உயர் பதவியை தரப்போகிறது.
கடந்த காலம் மிக சோதனையான காலகட்டம். தற்போது 15-4-2022 முதல் திசா புத்திகள் உன்னத நிலைக்கு கொண்டு செல்லப்போகிறது. இந்தியாவின் மத்திய அரசில் மிகப்பெரிய எச்.ராஜா பதவியை நிச்சயம் அடைவார். அடுத்த 12 ஆண்டுகள் அரசியலில் எச்.ராஜா மிக பிரகாசமாக ஜொலிப்பார். தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை அவர்கள் பிறந்தநாள் 4-6-1984. தமிழகத்தில் அண்ணாமலை சக்தி வாய்ந்த தலைவராக வலம் வருகிறார். அவரது கால நிர்ணயம் விதி எண் படி பா.ஜ கட்சிக்கு அண்ணாமலை அவர்களுக்கும் அண்ணாமலைக்கு பா.ஜ கட்சியாலும் பலன்கள் கிடைக்கப்போவது உறுதி…!!
– என அடித்து சொல்கிறார், தென்னிந்தியாவின் நாஸ்டர்டாம் மூகாம்பிகை தாசன்..!!
நேர்காணல்:
ஆர்.கே.பி,
பத்திரிக்கையாளன்,
ஊடகவியலாளன்