கொட்டும் மழையில் பொதுக் கூட்டம் முழக்கம்!!!!

கொட்டும் மழையில் பொதுக் கூட்டம்

கொட்டும் மழையில் பொதுக் கூட்டம்

கொட்டும் மழையில் பொதுக் கூட்டம் முழக்கம்!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் பொது கூட்டம் 2.2.2023 மாலை 8 மணி அளவியல் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

1951 ஆம் ஆண்டு வரை அரசாங்க பதிவில் இருந்த தேவேந்திர குல வேளாளர் என்கிற பெயர் திரும்பவும் சட்டமாக்கப்பட்டது.

தேவேந்திரகுல வேளாளர் எனப்படுவோர் பட்டியல் சமூகத்தின் பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு சமூகம் ஆகும்.

ஏழு பட்டியல் பிரிவு இனங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது வரவேற்கத்தக்கது.

ஆய்வு குறிப்புகள்:

சங்ககால மருதநில உழவரான மள்ளரே பிற்காலத்தில் பள்ளராக அழைக்கப்படுகின்றனர் என்பதை பல அறிஞர்களும் எடுத்துரைத்துள்ளனர்.

பழனி மலை முருகன் கோயில் வரலாறு:

கி.பி 1528ல் பழனி மலைக்கு மேல் பாலதண்டாயுத பாணி சுவாமி சன்னதி, தேவேந்திர சாதி அறமடம், விநாயகர் கோயில், மடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் உணவு , கோயில் முன்பு நந்தவனம், மலைமேல் ஏறுபவர்களுக்கு தண்ணீர்ப்பந்தல் ஆகியவை உண்டு பண்ணியுள்ளனர். பழனி செப்பேட்டில் 121 தேவேந்திரர்கள், 85 ஊர்களில் இருந்து வந்த முக்கியஸ்தவர்களின் பெயர் மற்றும் ஊர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் பல ஊர்களின் முக்கியஸ்தர்கள் ஒன்று கூட முடிந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதும், பிற சமூக அங்கீகாரத்துடன் வாழ்ந்துள்ளனர் என்பதும் பொதுவாக விளங்குகிறது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திருச்செந்தூர் முருகன் கோயில் தேவேந்திரகுல வேளாளர் க்கு சொந்தமானது.

அரசியல் ரீதியாக திராவிடக் கட்சிகள் எங்களுக்கு சம வாய்ப்பை அளிக்கவில்லை. தமிழகத்தில், கணிசமான அளவு தேவேந்திர குல வேளாளர்கள் உள்ளனர். இன்றைய அமைச்சர்களில் எத்தனை பேர் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பதை நான் சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. தமிழக அமைச்சரவையில், ஒரே ஒரு ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமே, ஒதுக்கப்படுவதை நாங்கள் அவமானமாகக் கருதுகிறோம். 04 மார்ச் 2019 அன்று குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

மாநிலப் பட்டியலினத்தில் உள்ள வாதிரியான் உட்பிரிவினையும் உள்ளடக்கி தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரைகளை ஏற்று மேற்குறிப்பிட்ட 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இனி தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு, மாநில அரசுக்கு பரிந்துரைக்கும் என 4 டிசம்பர் 2020 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார்.

சுமார் 15 லட்சம் மக்கள் ஒன்று திரட்டி பட்டியல் சமூக வெளியேற்றம் கோரிக்கை வலியுறுத்தி வரும் ஜுலை 2ஆம் தேதி சங்கரன்கோவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர்                                                                                                                                    -முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp