தூத்துக்குடி, நெல்லை கனமழைக்கு வாய்ப்பு!!!!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதைத்தொடர்ந்து தலைமன்னார் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக 55 முதல் 60 கிலோமீட்டர் அளவிற்கு காற்று வீசிவருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் தூத்துக்குடி கோவில்பட்டி ஒட்டப்பிடாரம் எட்டயபுரம் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. நாளையும் வெள்ளிக்கிழமை மழை நீடிக்கும்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு கடலில் புயல் உருவாகி இருப்பது குறித்து எச்சரிக்கும் வகையில் இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக துத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி சிவகங்கை தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
குமரிக்கடல் அதனைத் ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவக் கூடும் என்பதால் தூத்துக்குடி ராமநாதபுரம் நெல்லை மாவட்டம் மழை வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.
நாளைய வரலாறு செய்திக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் -முனியசாமி.