கோவை:
கோவை திருச்சி சாலையில் உள்ள டி.வி.எச்.விஸ்டா ஹைட்ஸ் குழுமங்களின் டவர் செவன் துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. ரியல் எஸ்டேட் துறையில், தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக டி.வி.எச். விஸ்டா ஹைட்ஸ் (TVH Vista Heights) குழுமம் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அனைத்து தரப்பினரும் வரவேற்கும் திட்டமாக கோவை திருச்சி சாலையில்,. TVH இன் டவர் செவன் புதிய திட்டம் 12.5 ஏக்கரில் அமைந்துள்ளது. 800 க்கும் அதிக வீடுகளுடன் 12 சூப்பர் கோபுரங்கள், அம்சங்கள் மற்றும் வசதிகளுடன்,.அமைந்துள்ள இதன் துவக்க விழா டி.வி.எச்.வளாகத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்றது கிரேட் ஹவுசிங் ஃபெஸ்டிவல் விழாவில் முன்னனி வங்கிகளான, எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் போன்ற வங்கிகளை சேர்ந்த பிரதிநிதிகள்,வாடிக்கையாளர்களின், கனவு இல்லத்தை சொந்தமாக்குவதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விதிகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில்,டி.வி.எச்.குழுமங்களின் தலைவர் ரவிச்சந்திரன் விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் டி.வி.எச்.வளாகத்தில் குடியிருப்பு வாசிகளின் கலைநிகழ்ச்சிகளுடன், பிரபல. பிரவீன் குமாரின் ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோ, பல்துறை இசை வித்தகர் திருமதி. ஐஸ்வர்யா சுரேஷ் இசை மற்றும் சின்னத்திரை புகழ், ஜோடி ஆல்யா மானசா, சஞ்சீவ் கார்த்திக், நீயா நானா புகழ் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.