தமிழக ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குமரியில் ஆர்ப்பாட்டம்!!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்ட குழு சார்பில் கார்ல் மார்க்ஸ்சின் தத்துவம் இந்தியாவை சிதைத்து விட்டது என்று கூறி தமிழகத்தில் அசாதாரண நிலையை உருவாக்க திட்டமிடும் தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தோழர் ஜி.சுரேஷ் மேசியதாஸ் தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் தோழர் ஏ.டென்னிசன் கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழியர் ஆர்.செல்வராணி, மேல்புறம் ஒன்றிய செயலாளர் தோழர் மரியதாஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ் நாராயணசாமி ,நாகர்கோவில் மாநகர செயலாளர் தோழர் ஆர் இசக்கிமுத்து,ஆறு காணி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சுகுமாரன், பாகோடு கிளைச் செயலாளர் தோழியர் ராஜேஸ்வரி தோவாளை தாலுகா செயலாளர் தோழர் எஸ்.கல்யாணசுந்தரம் தக்கலை கிளை ச்செயலாளர் தோழர் எஸ்.ராஜூஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
இநதிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தா.சுபாஷ் சந்திர போஸ் ஆர்ப்பாட்ட போராட்டத்தை விளக்கி பேசினார்.
ஏ.ஐ.டி.யு.சி.மாவட்டத்தலைவர் தோழர் எஸ் அனில்குமார் போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார்.
ஆர்பாட்டத்தில் காரோடு கிளைச் செயலாளர் தோழர் குமார் தோழர் நயினார் ஆசாரி, ஏ.ஐ.டி.யு.சி.காளிதாஸ் உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.