தூத்துக்குடி மார்ச் 7ம் தேதி முதல்வர் வருகை!!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் 7ஆம் தேதி தூத்துக்குடி வரவுள்ள நிலையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வருகின்ற 07.03.2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் வருகை தர இருப்பதால், மாவட்ட எல்கையான ஸ்ரீவைகுண்டம் வட்டம், வசவப்பபுரம் கிராமத்திலிருந்து தூத்துக்குடி வட்டம் மறவன்மடம் கிராமம் (சத்யா ரிசார்ட்) மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வரையிலான பகுதிகளில் 07.03.2023 அன்று காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை டிரோன் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உத்தரவினை மீறி டிரோன் போன்ற கருவிகள் பறக்கவிடப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிரோன் கருவிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-வேல்முருகன் தூத்துக்குடி.