உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
பொதுமக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 403 ஊராட்சிகளிலும் கிராமசபைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பாஞ்சாலங்குறிச்சி இந்திராநகர் கலையரங்கத்தில் வைத்து ஊரட்சி மன்ற தலைவி கமாலதேவி யோகராஜ் , தலைமையில் கிராமசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சியில் 15வது நிதிக்குழு, பேவர் பிளாக் சாலை ,தண்ணீர வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த நிலத்தடி நீரை உயர்த்த,மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டவேண்டும் ,ஊரக வளர்ச்சித்துறை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவற்றின் மூலம் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களிடம் தெரிவித்தார் .
மேலும் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.