மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழு மனு:
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்ய வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மேலஅரசடி ஊராட்சி மாற்று திறனுடையோர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில்:
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
“கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வாங்கிய மகளிர் சுயஉதவிக் குழுவின் அனைத்து உறுப்பினர்களின் கடன்களும் தள்ளுபடி என 110 விதியின்படி கூறப்பட்டதை உறுப்பினர்கள் நம்பி இருந்தனர்.
இப்பொழுது சில உறுப்பினர்களுக்கு தள்ளுபடி என்றும், சிலருக்கு நிபந்தனைப்படி தள்ளுபடி கிடையாது என்றும் வங்கி மூலம் தெரியவந்தது. எங்களை வட்டி, அபராத வட்டி மற்றும் அசல் கடன் தொகை ஆகியவற்றை கட்ட சொல்லி வங்கியில் இருந்து தகவல் சொல்லுகிறார்கள். ஆகையால் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்ததுபோல அனைத்து உறுப்பினர்களுக்கும் கடன்களை தள்ளுபடி செய்யப்பட தமிழக முதல்வர் கருணை கூர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் -முனியசாமி.