மலேசியாவில் தொழிலாளி மர்மமான முறையில் மரணம்!!!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த அய்யாதுரை என்பவர் மலேசியாவில் ஹோட்டலில் வேலை பார்த்தவர் மர்மமான முறையில் மரணம் உடலை மீட்டுத் தரக்கோரி உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாதுரை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அய்யாத்துரை அவரது ஊரின் அருகே உள்ள ஆலடி பட்டியை சேர்ந்த மாலன் என்பவர் மலேசியாவில் கோலாலம்பூர் பகுதியில் வைத்துள்ள ஹோட்டலுக்கு வேலைக்குச் சென்றுள்ளார்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கடந்த மார்ச் 8-ம் தேதி ஆத்திகுளத்தில் உள்ள அவரது மனைவி சொர்ணத்திற்கு ஹோட்டல் உரிமையாளர் மாலன்அய்யாதுரை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் நான் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளேன் அதில் வேறு ஏதேனும் இந்திய தூதரகம் மூலம் வழக்கு நடவடிக்கையில்ஏதும் ஈடுபட மாட்டேன் என அந்த கடிதத்தில் கையெழுத்து போட்டு கொடுங்கள் என கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அய்யா துரையின் குடும்பத்தினர் அய்யா துரையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார் சம்பவம் நடப்பதற்கு முன்பு கூட தொலைபேசியில் எங்களுடன் பேசி உள்ளார் எனவே அரசு உடனடியாக அவரது உடலை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி