NALAIYA VARALARU
கூட்டாம்புளியில் வழக்கறிஞர் அலுவலத்தில் மர்ம நபர்கள் அட்டூழியங்கள்!!!
தூத்துக்குடி மாவட்டம் கூட்டம்புளியில் வழக்கறிஞர் அலுவலத்தில் மர்ம நபர்கள் ப்ளெக்ஸ் பேனர் கிழித்து எரிந்து அட்டூழியம்.
கூட்டம்புளி வசந்த நகரில் பாலசந்தரபூபதி இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்ராக பணிபுரிந்து வருகிறார். கூட்டம்புளி காமராசர் தெருவில் மெடிக்கல் மாடியில் வழக்கறிஞர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது . நேற்று மாலை அவரது அலுவலகத்தில் ஃப்ளெக்ஸ் பேனர் சுவரில் ஒட்டி விட்டு சென்று உள்ளார் அன்று இரவு சில மர்ம நபர்கள் வந்து அவரது சட்ட அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஃப்ளெக்ஸ் பேனர் கிழித்து எரிந்து அலுவலகம் வாசல் முன்பு போட்டு விட்டு சென்றுள்ளனர். வழக்கறிஞர்க்கும் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்ட அந்த மர்ம நபர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு எனது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என புதுக்கோட்டை காவல் ஆய்வளார் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் கடந்த 31.3.23 அன்று இரவு சுமார் 11 மணி அளவில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த பத்திரிக்கையாளர் ஒருவரை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் வழிமறித்து கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
சாலையில் பத்திரிக்கையாளர்கள், பாமர பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் செல்ல முடியாமல், அச்ச உணர்வுடனே பயணிக்க வேண்டிய அசாதரண சூழல் தான் தூத்துக்குடியில் நிலவுகிறது.
பொது இடங்களில் இது போன்று பொதுமக்களை சர்வசாதாரணமாக அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும் போது, அவர்கள் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கையாளர்கள் வழக்கறிஞர்கள் நம்புகிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.