கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் ரோடு பகுதியை சார்ந்தவர் ஷப்னா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு சொந்தமான மூன்று கடைகள் அடங்கிய கட்டிடம் காவல்துறையினரின் குடியிருப்புக்கு எதிரே உள்ளது அந்த மூன்று கடைகளில் ஒரு கடையை இறைச்சி வியாபாரம் செய்யும் கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.அந்த இறைச்சி கடையை பாஷீத் என்பவர் நடத்தி வருகிறார். கடையை நடத்தி வரும் இவர் கடந்த சில ஆண்டுகளாக கடைக்கு வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார். இது சம்பந்தமாக கடையின் உரிமையாளர் அதிக அளவில் வாடகை தொகையை கேட்பதாக சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், இந்த வழக்கு நீதிமன்றத்தில்ல் நிலுவையில் உள்ளது.
இது சம்பந்தமாக கடையின் உரிமையாளருக்கும் கடையில் வாடகைக்கு இருக்கும் இறைச்சி கடைக்காரர்களுக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.கட்டிட உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அவரை கடுமையான வார்த்தைகளால் பேசுவதாக கூறப்படுகிறது. கடைக்கு முன்னால் உள்ள இடத்திலேயே ஆட்டை அறுத்து சுத்தம் செய்வது அந்த கழிவுகளை முன்னாலேயே போட்டு விடுவது போன்ற அந்த இடத்தை நாசம் செய்து வருவதாக தெரிகிறது மூன்று கடைகளுக்குமான மின் இணைப்பு லைன் மின் கணக்கீட்டு மீட்டர் ஆகியவை இவரின் கடையில் தான் உள்ளது. மற்ற இரண்டு கடைகளையும் சீரமைப்பு வேலைகளை செய்து அதை வாடகைக்கு விட நினைத்தாலும் மின் இணைப்பு தர முடியாது என்றும் மற்ற இரண்டு கடைக்கு வாடகைக்காக வருபவர்களிடம் தேவையற்ற பயத்தை உண்டாக்கி வாடகைக்கு வராமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது .
இந்த கட்டிடத்தின் உரிமையாளர் அவர்கள் இது சம்பந்தமாக கூறும்போது:-
நாங்கள் வாடகைக்கு விட்டுள்ள கடையில் இறைச்சி கடை வைத்துள்ள நபர் கடையை காலி செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் தேவையற்ற புகார்களையும் அவதூறு செய்திகளையும் பரப்பி வருகிறார் இந்த கடையை காலி செய்வது சம்பந்தமாக நாங்கள் கோவை 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டதாகவும் அவர் இரண்டு நாட்களுக்கு முன் வந்து நாங்கள் வாடகைக்கு விட்டுள்ள கடைக்குள் அத்துமீறி நுழைந்து மின் இணைப்பை துண்டித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் அளித்தும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தும் அவதூறு பரப்பி வருகின்றனர்.மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா அவர்களை நான் இதுவரை நேரில் பார்த்தது கூட கிடையாது எனவே தேவையில்லாமல் புகார் கொடுத்தும் அவதூறு பரப்பியும் கடையை காலி செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.இவரின் இதுபோன்ற செயல்களால் நான் நிம்மதி இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி மிகுந்த மனவேதனையில் உள்ளேன் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கையாகும் மேலும் இதனால் மற்ற இரண்டு கடைகளிலிருந்து வரும் வாடகை பணம் வராமல் எங்கள் வருமானம் பாதிப்படைந்துள்ளது.இவரின் இவ்வாறான செயலால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்.இது சம்பந்தமாக போத்தனூர் காவல் நிலையத்தில் துணை ஆணையாளர் அவர்களை சந்தித்து புகார் மனு அளித்துள்ளோம் அவரும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.
-ஈஷா. ராஜேந்திரன்.