
கோவை குனியமுத்தூர் பகுதி சேர்ந்தவர் ரியாஸ் அகமது இவர் குனியமுத்தூர் பகுதியில் சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை செய்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு இஎம்ஐ வசதியுடன் இறைச்சியை விற்பனை செய்யலாம் என்று கூறியுள்ளார். இது குறித்து இறைச்சி விற்பனையாளர் ரியாஸ் அகமது கூறுகையில், குனியமுத்தூர் பகுதி அல். அமீன். மட்டன் சிக்கன் கடை வைத்து உள்ளேன் மேலும் பல electronic shop மூலமாக கிரெடிட் கார்டுகளில் டெபிட் கார்டுகளில் இஎம்ஐ ஆப்ஷன் கொடுத்து வருகிறார்கள்.
பொதுவாக மொபைல் – டிவி – பிரிட்ஜ் வாஷிங் மெஷின் அனைத்திற்கும் கொடுத்து வருகிறார்கள். அதனால் மட்டன் சிக்கன் ஆகிய இறைச்சி களுக்காக நாம் ஏன் கொடுக்க கூடாது என நினைத்தேன்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குறிப்பாக சாமானிய மக்கள் ஒரு பெரிய நிகழ்ச்சிக்காக இறைச்சி வாங்கும்போது ஒரு பெரிய தொகை செலவு ஆகும் இதனை இ. எம். ஐ மூலமாக இறைச்சியை கொடுத்தால் அவர்கள் சிரமமின்றி கட்டுவார்கள். கறிக்கடை வரலாற்றில் மட்டன் மற்றும் சிக்கன் 5000 மேல் வாங்கினால் இ. எம். ஐ கட்ட மூன்று மாதம் ஆறு மாதம் ஒன்பது மாதம் 12″மாதம் என தவணை முறையில் கொடுத்து வருகிறோம்.
மூன்று மாசத்துக்கு இண்ட்ரெஸ்ட் தொகை 170 ரூபாய் ஆகும் எனவும் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிக்காக 500 முதல் 700 கிலோ வாங்கினால் நடுத்தரமக்கள் இதுபோன்று இ. எம். ஐ மூலமாக வாங்கிக் கொள்ளலாம் மேலும் ரம்ஜான் பண்டிகைக்காக மட்டும் இல்லாமல் அனைத்து நாட்களிலும் பொதுமக்களில் நலனுக்காகவே இதனை கொடுத்து வருகிறோம் என தெரிவித்தார்பொதுமக்களிடையே இந்த இ. எம். ஐ கட்டணத்தில் இறைச்சி விற்பனையானது நல்ல வரவேற்பு பெரும் என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக இறைச்சி விற்பனையாளர் கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.











