இளவேலங்கால் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்!!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் இளவேலங்கால் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஓட்டப்பிடாரம் அருகே இளவேலங்கால் கருப்பசாமி அருள்மிகு தர்மசாஸ்த கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 3ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் பந்தயத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருநெல்வேலி, தூத்துக்குடி , உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தன, இளவேலங்கால் -கயத்தார் சாலையில் நடு மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என்று இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது .
நடு மாட்டு வண்டியில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 8 மைல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சின்ன மாட்டு வண்டியில 12 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன 6 மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம் அருகே இளவேலங்கால் கிராமத்தில் கம்மவார் சங்கம் மற்றும் கம்மவார் இளைஞர் அணியினர் சார்பில் நடைபெற்ற மூன்றாமாண்டு மாபெரும் மாட்டு வண்டியை பந்தயத்தை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கொடியைத்து தொடங்கி வைத்தார், தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 40000 மற்றும் இரண்டாம் பரிசு ரூ.30000 முன்றாவது பரிசு ரூ.20000 அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் அவர்கள், மற்றும் மாவட்ட வீர விளையாட்டு கழக செயலாளர் விஜயகுமார் , ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி அழகிரி என்ற கோபி , ஹரிபாலன் கம்மவார் சங்கம் தலைவர், ராமசாமி ஊர் தலைவர், சாவித்திரி முருகேசன் ஊராட்சி மன்ற தலைவர் இளவேலங்கால், விழா ஒருங்கிணைப்பாளர் முத்து ராஜ் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.