கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்: பொதுவாகவே இன்றைய காலகட்டங்களில் ஒருவரை தொடர்பு கொள்வது முதல் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவது வரைக்கும் அனைத்திற்கும் செல்போன் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழி போய் செல்போன் இன்றி வாழ்க்கை இல்லை. உலகமே உள்ளங்கைக்குள் அடங்கியுள்ளது. இந்த சூழ்நிலைக்கு அனைத்து மக்களும் இந்த சுழற்சியில் அடிபணிந்துள்ளனர் என்றே சொல்லலாம். தற்பொழுது ஒரு தனி மனிதனுடைய அனைத்து ரகசியங்களையும் காக்கும் பெட்டகமாக செல்போன் திகழ்ந்து வருகிறது .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்படிப்பட்ட சூழலில் செல்போன் திருட்டு போனாலோ அல்லது காணாமல் போனாலோ அதை கண்டுபிடிக்க மற்றும் அதனை தடை செய்ய பல வழிகள் இருக்கின்ற பொழுதும் அதனை சரியாக திட்டவட்டமாக கண்டுபிடிக்கவும் அல்லது பிளாக் பண்ணவும் முடிவதில்லை எனவே இந்திய மத்திய அரசு தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்கு பிரத்தியேகமாக ஒரு இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். www. ceir.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய செல்போனில் பிரத்தியேகமாக கொடுக்கப்பட்ட (IMEI) ஐ எம் இ ஐ நம்பரை இந்த இணையதளத்தில் சென்று பதிவிட்டால் தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்கவும் உபயோகப்படுத்திய சிம் கார்டு பிளாக் செய்யவும் முடியும்.
ஆனால் மத்திய அரசு இதனை சில கட்டுப்பாடுகளுடன் சில விதிமுறைகளை பின்பற்றி இயக்கி வருகின்றனர். காவல்துறை புகார் நம்பர் செல்போனின்(IMEI) ஐ எம் இ ஐ நம்பர் போன்றவர்களை உள்ளீடு செய்ய வேண்டும் இதனை நிறைவு செய்வதற்கு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும் கூட சரியான தகவலின் மூலமாக காவல்துறையை உதவியுடன் காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்கவும் வேறு நம்பரை கொண்ட சிம்காடு உபயோகப்படுத்தினாலும் செல்போனில் கண்டுபிடிக்கவும் முடியும் இந்த இணையதளத்தில் சென்று நேரடியாகவே செல்போன் தொலைந்தவர்கள் அதை பிளாக் செய்யவும் ஒருவேளை திரும்ப கிடைத்துவிட்டால் unblock செய்யவும் முடியும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.