சிங்கம்புணரி வட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் நாளை (11.05.2023 அன்று) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிங்கம்புணரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையிலான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.
இம்முகாமில் சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிலும் கலந்து கொண்டு பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.