மறுசுழற்சி மையத்திற்குள் புகுந்த படையப்பா!!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் ஆங்காங்கே காட்டு விலங்குகள் நடமாடுவது வழக்கம். இதில் அதிக பிரசித்தி பெற்றது காட்டு யானைகளின் கூட்டம் தான். ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு காட்டு யானை பிரபலமாக இருப்பது இங்கு உள்ள மலைப்பகுதிகளின் தனித்தன்மை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மூணார் பகுதியை சுற்றி படையப்பா என்ற யானை மிகவும் பிரபலமானது. இது மனிதர்களோடு சகஜமாக நடந்து கொள்வதும் அத்துமீறி பொருட்களை நாசம் செய்யாமல் இருப்பதுமாக இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக படையப்பாவின் போக்கு மாறி தற்பொழுது அனைத்து பொருட்களையும் நாசப்படுத்துவது, வாகனங்களை தடுத்து நிறுத்தி உடைப்பது போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வந்தது.
சில வாரங்களாகவே இதை பற்றிய விமர்சனங்கள் சற்று குறைந்தே இருந்தன. ஆனால் நேற்று மீண்டும் படையப்பா என்ற காட்டு யானை மூணாறு அருகே கள்ளார் குப்பை மறுசுழற்சி மையத்திற்குள் புகுந்து பகல் நேரத்திலும் வந்து காய்கறிகளை சாப்பிடுகிறது. அருகில் நின்று கொண்டிருந்த மூன்று சக்கர வாகனத்தை சேதப்படுத்தவில்லை என்றாலும் பகல் நேரங்களில் அங்கு நடமாடுவதால் குப்பை கழிவு சுத்திகரிப்பு மையத்தில் வேலை செய்யும் வேலையாட்கள் செல்ல தடையாக உள்ளன.ஆனால் படையப்பா காட்டுயானை யாரையும் தொந்தரவு செய்வதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.