கோவை மாவட்டம் வால்பாறை இயற்கை எழில் கொஞ்சும் ஓர் சுற்றுலா தளமாகும். வால்பாறையை சுற்றிலும் சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்ளும் இடங்கள் அதிகமாக உள்ளன இவற்றைப் பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பி பல்வேறு தரப்பட்ட வியாபாரிகளும், தங்கும் விடுதி,உணவு விடுதி உரிமையாளர்களும் வாகன ஓட்டுனர்களும் எதிர்பார்பில் உள்ளனர்.அதுவும் அரசு விழா மலர் கண்காட்சி போன்றவை நடக்கும் பொழுது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளில் வியாபாரம் பெருகும் இதனை எதிர்பார்த்து அனைத்து வியாபாரிகளும் காத்திருப்பர்.
இந்த சூழ்நிலையில் வால்பாறையில் கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படியும், மாண்புமிகு முப்பெரும் துறை அமைச்சர் திரு. வி. செந்தில் பாலாஜி அவர்கள் அறிவுறுத்தலின் படியும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்களின் வழிகாட்டிதலின்படியும், கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. தளபதி முருகேசன் அவர்களின் பரிந்துரையின் படியும், வால்பாறை நகர கழக செயலாளர் திரு. ஆ. சுதாகர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று வால்பாறையில் வருகின்ற (மே 2023) 26, 27, 28, ஆகிய தினங்களில் கோடை விழா நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள்.
இதனால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கோடை விழா நடைபெற அனுமதி அளித்துள்ள
தமிழக முதல்வருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வால்பாறை நகர கழக திமுக சார்பில் நன்றியை தெரிவித்து உள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.