பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவினை தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்க தேவி ஆலய 67-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும், வீர வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரர் வீமராஜா என்ற ஜெக வீரபாண்டிய கட்டபொம்மன் துரைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவரது இல்லத்தில் வைத்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
இவ்விழா 2 நாட்கள் நடைபெறுகிறது 14.05.2023 அன்று மாபெரும் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெறும். ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் சிறப்பு பூஜைகள் என பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது.
இந்த அரசு விழாவில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் ஆகியோர் உடன் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.