சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சிறுபான்மை துறையின் செயற்குழு கூட்டம்!!
தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறையின் செயற்குழு கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக சிறுபான்மை துறை யின் தலைவர் அஸ்லாம் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறுபான்மை துறையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹாமர் இஸ்லாம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் எஸ்.சி.,எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின சமூகத்தில் தலைமை பண்பை வகிக்கும் நபர்கள் மூலமாக மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் குறித்து பரப்புரை செய்ய வழிவகை செய்ய வேண்டும் உட்பட முக்கியமான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா அவர்கள் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார் மேலும் மாடுகளை காக்கும் இந்த மத்திய அரசு மனிதர்களை காக்க மறந்து விடுகிறது என்று கடுமையாக சாடினார்.
இதில் மாநில துணைத்தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் அடையாறு டி.துரை, சிறுபான்மை துறையின் துணைத் தலைவர்கள் ஸ்டீபன், அப்ஷரி பேகம், பிரின்ஸ் தேவசகாயம், நிர்வாகிகள் ஆர்.கே. நகர் சையத், கோவை தெற்கு மாவட்ட தலைவர், M. முகம்மது ஹாரூன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜா, A.முகமது இஸ்மாயில், சந்திரமோகன், பாபு, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.