குறுக்குச்சாலையில் வரலாறு காணாத காளைகளின் கூட்டம்!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் குறுக்குச்சாலை அருகில் கே வேலாயுபுரத்தில் நேற்று அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ வெற்றி விநாயகர் மற்றும் கருப்புசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு 17 ஆம் ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சின்ன மாடு பூஞ்சிட்டு என இரு பிரிவிலாக போட்டி நடைபெற்றது இதில் சின்ன மாடு பிரிவுகளில் 35 ஜோடி களைகள் கலந்து கொண்டன. பூஞ்சிட்டு பிரிவில் இதுவரை தூத்துக்குடி மாவட்டத்திலே கண்டிராத காளைகளின் கூட்டம் 57 ஜோடிகள் கலந்து கொண்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பூஞ்சிட்டு ஜோடியில் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் இந்த விழாவில் ஐந்தாவது பரிசு வழங்கப்பட்டது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு ஓட்டப்பிடாரம் காவல்துறை மற்றும் கோவில்பட்டி டிஎஸ்பி அவர்கள் சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.












