
பணி முடிந்து வீடு திரும்பிய மின்வாரிய ஊழியர் லாரி மோதி பலி!!
காவல்துறையினர் விசாரணை!!!
தூத்துக்குடி தெர்மல் நகர் டி.டி.பி.எஸ் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்தவர் நாராயணன் மகன் சந்திரன் (வயது 52). இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் இரவு சுமார் 8 மணியளவில் பணி முடிந்து கேம்ப் – 1 பகுதியில் தனது (டிஸ்கவர்) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் வந்த TN 52 X 4651 என்ற நம்பர் கொண்ட ஸ்ரீ பொன்னம்மாள் டிப்பர் லாரி சந்திரனின் பைக் மீது பலத்த வேகத்தில் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சந்திரன் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூடவே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடி தலைமறைவானார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தகவலறிந்த தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் லாரி மோதி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்தி களுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.











