திருச்சியை சேர்ந்தவர் நாசர்அலி. இவரது மனைவி நஜிபுனிஷா, இவர்களுக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர், இவர்களது இரண்டாவது மகன் 22 வயதான சாகுல்அமீது, இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பெயின்டிங் வேலை செய்து வருகின்றார், இந்த நிலையில் கடந்த 09. 02. 2022 அன்று கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், இதனைத் தொடர்ந்து இது குறித்து நஜிபுனிஷா 10, 02. 2022 அன்று கடைவீதி காவல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணி வழங்கியதாக போத்திராஜன் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தின் மீதும், அதன் சூப்பர்வைசர் சிவராஜன் என்பவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த கடைவீதி காவல்துறையினர், நேற்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 28 வயதான பில்டிங் சூப்பர்வைசர் சிவராஜன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.