வால்பாறை அருகே பழுதடைந்துள்ள தார் சாலை!!
சாலையோர தடுப்புகள் இன்றி அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!!!
கோவை மாவட்டம் வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த சூழ்நிலையில் சோலையார் டேம் பகுதியில் இருந்து ஷேக்கல் முடி செல்லும் சாலையில் கல்யாண பந்தல் என்னும் பகுதியில் தார் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் சாலை ஓர தடுப்பு சுவர் இல்லாமல் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் வாகனத்தை இயக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். எனவே பழுதடைந்த தார் சாலையை உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் என்றும் சாலையோர தடுப்புகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.