கோவை காந்திபுரம் பகுதியில் “WE AXIS OVERSEAS EDUCATION AND PLACEMENT” என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதனை ராதாகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் சுகந்தி, சஞ்சய், கோகிலா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து Al SARA GENERAL TRADE என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் கமலக்கண்ணன்.
இவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். முதலில் துபாய்க்கு அனுப்பி விட்டு அங்கிருந்து வேலை பர்மீட் கொடுத்து ஐரோப்பாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து துபாய் செல்ல விசிட் விசா மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதற்காக பலரிடம் 30 லட்சத்திற்கும் மேல் பணத்தை பெற்றுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை நம்பி துபாய் சென்ற நபர்களுக்கு பல நாட்கள் ஆகியும் வேலை பர்மிட் தராமல் இருந்துள்ளனர். இது குறித்து இவர்களை அனுப்பிய நிறுவனத்தினர்களிடம் கேட்ட நிலையில் அங்குள்ள மற்றொரு நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் என கூறி உரிய பதிலளிக்காமல் செல்போனை சுவிட் ஆப் செய்துள்ளனர்.
இதனால் அவர்கள் ஐரோப்பாவிற்கும் செல்ல முடியாமல் கையில் இருந்த பணத்தை கொண்டு நாட்களை கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிலரது விசிட் விசாவின் நாட்களும் முடிந்ததால் துபாய் போலிசாரிடம் சிக்கி வழக்கு பதிவு செய்து பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
பின்னர் அங்குள்ள தமிழ் நண்பர்களிடம் பண உதவி பெற்று தற்போது கோவை திரும்பி உள்ளனர். இதனையடுத்து தற்போது அந்நிறுவனத் திடமிருந்து தங்களது பணத்தை பெற்று தருமாறும், அந்நிறுவனத்தினர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.