மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்டம் சார்பாக எதிர்வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட மஜக முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் “தேசம் காப்போம்” என்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது.
இப்பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (20.07.2023) மாலை கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான எம்.ஹெச்.ஜாபர் அலி, இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் PMA.பைசல் ஆகியோர் பங்கேற்று பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும் இப்பொதுக்கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக மணிப்பூரில் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசின் துணை கொண்டு நடைபெற்று வரும் கலவரத்திற்கு எதிராக இக்கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஜாபர் சாதிக், ஆயில் ஹக்கீம், முகமது ஹனீப், அன்வர் பாட்ஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் MMR.முஜி, இளைஞர் அணி பொருளாளர் அசார், இளைஞரணி துணைச் செயலாளர் இம்ரான், வர்த்தக அணி செயலாளர் பயாஸ், பொருளாளர் அப்துல் சலீம், துணைச் செயலாளர்கள் ஜாஹிர்,
ரஹ்மான், சுற்றுச்சூழல் அணி செயலாளர் கோட்டை ஹக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப்ரோஸ் கான், வழக்கறிஞர் அணி செயலாளர் ஹாரூன் ரஷீத், மாணவர் இந்தியா செயலாளர் பாசில், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜாகிர், பொருளாளர் அன்சர், துணைச் செயலாளர் ரபீக், சம்சுதீன்,
வானவில் ஆட்டோ நிர்வாகிகள் இப்ராஹிம், பீர், உசேன், ரகுமான், பாஷா, தொழிற்சங்க முன்னாள் நிர்வாகிகள் ஷாஜகான் மற்றும் ரியாஸ் துணைச் செயலாளர் பாரூக் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் மரக்கடை ஜமால் மற்றும் ஐடிவிங் முன்னாள் செயலாளர் சிராஜ் ஆகியோர் தங்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.