தூத்துக்குடியில் நடந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு கீழே உள்ள சாப்பாட்டு அறைக்கு சென்று சாப்பிட சென்றவர்கள் எதிரே பார்த்தபோது மூதாட்டி ஒருவர் தனது பேரனுக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தார். ஆனால் அவரது முன்பாக இரண்டு இலைகளில் சாப்பாடு. சற்றே அதிர்ந்து போனேன். ஒருவேளை அந்த பையன் சற்று மன வளர்ச்சி குன்றிய நபராக இருப்பாரோ என்று.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இருந்தாலும் அந்த முதிர்ந்த பாட்டி மீண்டும் உணவு ஊட்டினார். அந்த பையன் செல்போனை பார்ப்பதனை நிறுத்தவில்லை. இருந்தாலும் சற்று தயக்கதோடு அதனை விசாரித்த போது பாட்டி சொன்ன செய்தி கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. மாணவன் கோவையில் தனியார் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கிறான் என்றும் அவன் செல்போன் பார்க்காமல் சாப்பிட முடியாது என கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடியில்.