தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் எம் எஸ் வி திருமணம் மண்டபத்தில் நேற்று மாலை ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. என் மண் என் மக்கள் ஊழலுக்கு எதிரான நடைபயணம் ஜூலை 28ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அண்ணாமலை நடைப்பயணத்தை தொடங்குகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் தொடர்ச்சியாக ஜூலை 12ஆம் தேதி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார், பின்னர் எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து விளாத்திகுளம் வரும் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு கொடுப்பது, கட்சித் தொண்டர்களை சந்திக்க வைப்பது, தொகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வது போன்ற பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் சரவண கிருஷ்ணன் மற்றும் மாவட்ட துணை தலைவர் சேதுராஜ் அவர்கள் முன்னிலை வகித்தனர்…, மேலும் மாவட்ட தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர்கள் R.நாகராஜ் BA,DIFS மற்றும் ரகுபதி , மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் செந்தில் குமார், பொது செயலாளர் பாபு நாராயண சாமி மற்றும் பொருளாளர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.