கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான் பேட்டை அடுத்தபூரண்டாம்பாளையத்தில் டாஸ்மாக் மது கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கு இருந்து 14 குவாட்டர் பாட்டில், 2 ஃபுல் மதுபாட்டில்களை திருடி உள்ளனர். அதுமட்டுமின்றி கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவின் எந்திரத்தையும் தூக்கி கொண்டு தப்பியோடி விட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று கடை திறக்க வந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடையில் உள்ள பணம் அப்படியே இருக்கிறது. குவாட்டர் மற்றும் ஃபுல் பாட்டில்கள் மட்டுமே திருடபட்டுள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் ஈடுபடுவது யார் என்பதை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.