தவறான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் தன் தகப்பனுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கேரளா அரசு மருத்துவமனை மீது பெண் புகார்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியை சேர்ந்த சின்ன கானல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூரியநல்லி என்ற பகுதியில் வசித்து வரும் கீதா என்பவருடைய தகப்பனார் கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னகானல் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து உள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தனக்கு காச நோய் இருப்பதாக கூறிய மருத்துவர் பல பரிசோதனைகளை மேற்கொண்டு காசா நோயை உறுதி செய்தனர். அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன இரண்டு வருடத்தில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டில் சென்று மருத்துவமனையில் காசா நோய்க்கான பரிசோதனை மேற்கொண்ட பொழுது அவருக்கு இதுவரை காசநோயே வரவில்லை என்று உறுதி செய்துள்ளதாகவும் கேரளா அரசு மருத்துவமனை தவறான பரிசோதனையாலும் அதனால் கொடுத்த மருந்துகளினால் தன் தகப்பனுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தற்பொழுது எழுந்து நடக்க கூட முடியாத சூழ்நிலையில் தன் தகப்பன் தவிப்பதாகவும் இதற்கு கேரள அரசு மருத்துவமனை விளக்கம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கை தற்பொழுது குறைந்து அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனை அணுகுவதில் சற்றும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.