உலகளாவிய ஆன்மீக கூட்டமைப்பு சார்பில் குருஜி ஷிவாத்மா, தலைமை ஒருங்கிணைப்பாளர்சாய் சுரேஷ், ஓம் குடில் திருவண்ணாமலை சிவ வெற்றி வேல், வியாசர் பீடம் சித்தூர் ஸ்ரீ ஸ்ரீ சிவயோகி சிவகுமார் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் நிறுவனர் குருஜி ஷிவாத்மா பேசுகையில், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏதாவது ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்துவது தான் உலகளாவிய ஆன்மீக கூட்டமைப்பின் அடிப்படை நோக்கம். ஒவ்வொரு தனி மனிதனுடைய ஆன்மீக மாற்றம்தான், இந்த பிரபஞ்சத்தின் மாற்றம்.
பிரபஞ்ச மாற்றத்தை எளிதாக மாற்ற முடியாது. ஆனால், ஒவ்வொரு தனிமனித மாற்றத்தின் மூலம் இந்த பிரபஞ்ச மாற்றம் எளிதானது. அதற்காக உலக மக்கள் ஆன்மீக விழிப்புணர்வு அடைய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பாவங்கள், தவறுகள், குற்றங்களை கழுவி விட்டு புனிதத்துவம் அடைய வேண்டும். இதுதான் இந்த கூட்டமைப்பின் நோக்கம். மக்கள் ஆன்மீக விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக, இந்த கூட்டமைப்பு மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்வாறு மனிதர்களுக்கு சேவையாற்றி, உதவ கூடிய அமைப்புகள் ஒத்த கருத்துடன் இணைந்து
மனித குலத்திற்கு மிகப்பெரிய அடிப்படையான மாற்றத்தை கொடுப்போம். இவ்வாறு அனைவருடைய ஒத்துழைப்பில் உலக மாற்றம் நிகழும். உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் நலமுடன் வாழ வேண்டி வேள்விகளை நடத்துகிறோம். இதில் அனைவரும் பங்கேற்று வருகிறார்கள். இந்த வேள்விகளை கடந்த 3 வருடங்களாக நடத்தி வருகிறோம். தற்போது இந்த வேள்வி கோவையில் நடத்த உள்ளோம்.
இது தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநிலத்திலும் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். ஜாதி, மதம், மொழி என அனைத்தையும் கடந்து அனைவரும் பங்கேற்க கூடியது இந்த வேள்வி. கோவை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்காகவும், ஆதிவாசி, பழங்குடியின மக்களுக்காகவும், இலவச மருத்துவ சேவை செய்வதற்காக ராஜபாளையம் அரவிந் ஹெர்பல் ஆம்புலன்ஸ், மருந்துக்களும் , மருத்துவரும், உதவி மருத்துவரும் இலவசமாக சேவை செய்ய உள்ளனர். இந்த சேவை விரைவில் தொடங்க உள்ளோம் என்றார்.
-சீனி, போத்தனூர்.