கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பூதப்பாண்டி அரசு தலைமை தாலுகா மருத்துவமனை பின்புறமுள்ள ஸ்ரீநகர் தெருவில் காங்கீரிட் தளம் உடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் ஸ்ரீவராகி சக்திபீடம் உள்ள தெருவில் வடிகால் ஓடை மற்றும் காங்கீரிட் தளம் இல்லாததால் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் ஸ்ரீநகர் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இந்த தெருவில் காங்கீரிட் உடைந்து பெரும் பள்ளமாக காணப்படுவதால் பள்ளிக்குழந்தைகளை ஏற்ற வரும் ஆட்டோ ஓட்டுநர்களும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் இந்த பாதையை பயன்படுத்த தயங்குகின்றனர்.
எனவே பள்ளிக்குழந்தைகளின் நலன்கருதியும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், முதியவர்கள் நலன்கருதி சம்மந்தப்பட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பூதப்பாண்டி அரசுதலைமை மருத்துவமனை பின்புறம் செல்லும் ஸ்ரீநகர் தெருவில் புதிதாக காங்கீரீட் தளம் மற்றும் வடிகால் ஓடை அமைத்துதர நடவடிக்கை மேற்கொள்ள பூதப்பாண்டி ஸ்ரீநகர் தெரு பொதுமக்கள் சார்பாக பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.நாராயணசாமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கிறார்.
-M.சுரேஷ்குமார்.