தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை கிராமத்தைச் சார்ந்த ராம்குமார் இவரது மனைவி பேச்சியம்மாள் வயது 22 இவர்களுக்கு ஆறு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அதே பகுதியில் ராம்குமார் சலூன் கடை நடத்தி வருகிறார் ,நேற்று உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வரும்பொழுது காலதாமதம் ஆகிவிட்டதால் ராம்குமாருக்கும் பேச்சியம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது சிறிது நேரம் கழித்து ராம்குமார் வீட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் கழிவறையில் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் இரண்டு கை மற்றும் நெஞ்சு பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் பேச்சியம்மாளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.