கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் கொச்சின் டென்னிஸ் கோடி சாலை போடி மெட்டு முதல் மூணாறு வரை நான்கு அடி அகலப்பாதையாக இருந்தது 15 அடியாக விரிவாக்கம் செய்ய சுமார் 381.76 கோடி ஒதுக்கப்பட்டது இதற்கான வேலை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தை முடிக்க த தீர்மானம் எடுக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனாலும் அடிக்கடி ச மண் சரிவு மற்றும் சாலை சிதலமடைந்து காணப்பட்டதால் விரிவாக திட்டமானது சற்று தாமதப்படுத்தப்பட்டது தற்பொழுது ஆறு வருடங்கள் கழித்து விரிவாக்கம் முடிவடைந்து முதன் முதலாக இடுக்கி மாவட்டத்தில் ஒரு டோல்கேட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கடற்கரை அவர்கள் அதனை திறந்து வைக்க வருகை தருகிறார்.
எட்டு டிக்கெட் கவுண்டர்களைக் கொண்ட இந்த கட்டண வசூல் மையம் சாலை விரிவாக்கத்திற்கு உதவியாக இருந்தாலும் கூட அங்கே வசிக்கும் மக்களுக்கும் சுற்றுலாவிற்கு வாகனம் ஓட்டும் சாதாரணமாக கஷ்டப்படும் வாகன ஓட்டிகளுக்கும் இது மிகப்பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது. இதில் கேரளா அரசு தலையிட்டு உள்ளூர் வாசிகளுக்கு சில கட்டண குறைவு அல்லது கட்டண விலக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.