மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியான் கலுங்கு பட்டியில் . 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு கண்மாயில் சடலமாக கிடப்பதாக செக்கானூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கழுத்து கண் போன்ற இடங்களில் குத்தி கொலை செய்துள்ளனர். மேலும் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் விக்கிரமங்கலம் அருகே உள்ள நடுமுதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பத்தேவர் மகன் கருப்பையா.59.என்பது தெரியவந்தது.
கருப்பையாவிற்கு வசந்தி என்ற மனைவியும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். மேலும் நடுமுதலைக்குளம் கிராமத்தில். டீகடை வைத்து நடத்தி வந்துள்ளார். தினமும் காலையில் வீட்டில் இருந்து சென்று டீ கடையை திறப்பது வழக்கம். அதேபோன்று இன்று அதிகாலை வீட்டில் இருந்து கடைக்கு சென்று கடையைத் திறந்து அடுப்பை பற்றவைத்து டீ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் இவரை பிடித்து இழுத்து சென்று ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்று உள்னனர். இதன்பின்னர் கருப்பையாவை கழத்தை அறுத்தும் கண்களை வெளியே தோண்டி எடுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு பன்னியான் கண்மாய் பகுதி அருகே உடலை வீசி விட்டு கொலையாளிகள் தப்பி சென்ற உள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். சொத்து மற்றும் கடன் தகராறில் கொலை செய்யப்பட்டார்? முன் விரோதம் காரணமா? என பல கோணங்களில் செக்கானூரணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .
இந்நிலையில் அதிகாலையில் நடந்த இக்கொலை சம்பவத்தால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளநிலையில் கொலை செய்யப்பட்ட கருப்பையாவின் மூன்றாவது பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-தமிழரசன், மேலூர்.