நீட் தேர்வு மன உளைச்சலால் நேற்று மகன் தற்கொலை! இன்று தந்தை தற்கொலை! குடும்பத்தையே காவு வாங்கிய நீட்!!

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சியாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற போதிலும், போதுமான மதிப்பெண்களை பெறாததால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவரது தந்தையும், இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மகனை இழந்த சோகத்திலும், அதிர்ச்சியிலும் இருந்து வந்த அவர், இன்று தற்கொலை செய்து கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்ககோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசேதாவை கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட நாட்களுக்கு பிறகு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இன்னும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கடந்த 12ஆம்தேதி நடைபெற்றது. இதில் அந்த மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

மேலும் மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, ‘நீட் தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பிருந்தே தகுதி வாய்ந்த மருத்துவர்களை தமிழ்நாடு கல்வி திட்டம் உருவாக்கித் தந்துள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து எப்போது விலக்கு அளிக்கப்படும்?’ என்ற கேள்வியை அப்போது எழுப்பினார்.

அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‛‛நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது என்பது மாணவர்களின் போட்டிபோடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம். நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும். எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்து ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வு, அவருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலால் தற்கொலை செய்துள்ளார். சென்னையை அடுத்த குரோம்பேட்டை, குறிஞ்சி நகரைச் சேர்ந்த புகைப்படக்காரர் செல்வசேகர் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன், கடந்த 2022ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற போதிலும், போதுமான மதிப்பெண்களை பெறாததால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை.

அதனால், மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதும் நோக்கத்துடன் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திருக்கிறார். அவருடன் பயின்ற மாணவர்களில் சிலர் தனியார் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து விட்ட நிலையில், தம்மால் மருத்துவப் படிப்பில் சேர முடியாதோ என்ற மனவருத்தத்திலும், விரக்தியிலும் இருந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் சாவுக்கு நீட் தேர்வுதான் காரணம் என செல்வசேகர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

ஜெகதீஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய சிட்லபாக்கம் காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை செல்வசேகரும் இன்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த செல்வசேகர், இன்று அதிகாலை அவர்கள் வசித்து வந்த வீட்டின் மாடியில் உள்ள அறையில் கேபிள் வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நீட் தேர்வு தந்த மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மகனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அவரது தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு கொண்டு வரப்படுவதற்கான நோக்கமாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட இரு அம்சங்கள், மருத்துவக் கல்வியின் தரத்தை நீட் அதிகரிக்கும்; மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை நீட் தேர்வு தடுக்கும் என்பன தான். ஆனால், இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் நீட் தோற்று விட்ட நிலையில், அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது.

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp