கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதி அருகே அமைந்திருக்கும் அடிமாலி என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் படை பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னுக்கு பின்முரணாக பதில் அளித்ததால் அவர்கள் தங்கி இருந்த லாட்ஜில் சென்று தேடிய பொழுது மிகவும் ஆபத்தான போதை பொருள்களில் முதல் ஐந்தாவது இடத்தில் இருக்கும் MDMA அல்லது மோலி என்று அழைக்கப்படும் போதை மருந்தின் மற்ற பெயர்கள் சூப்பர்மேன், ரோலக்ஸ் பிங்க் சூப்பர்மேன், மாண்டி ஆகியவை. காப்ஸ்யூல்கள், மாத்திரைகள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது.
இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் குமட்டல், உடல் பிடிப்பு, மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் வருகின்றன. இந்த போதை பொருள் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஒருவர் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த வர் என்பதும் மூவற்றுப்படை சார்ந்த இரண்டு பேர் இந்த போதை பொருளை விற்பனை செய்வதற்காக அடிமாலியில் வந்து தங்கியதாக ஒப்புக்கொண்டனர் உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.